மனிதர்களுக்கு தற்போது பாரிய அச்சுறுத்தலாக மாறிவரும் புற்றுநோய் குறித்து, ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, மனிதர்களின் புற்றுநோயை நாய்கள் மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பது உறுதியாகியுள்ளது.
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது தான் மிக முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான சோதனைகளுக்கு செலவும் மிக அதிகம். எனினும், விஷேடமாக பயிற்றப்பட்ட நாய்களைக் கொண்டு, இந்த பணியை முன்னெடுக்க முடியும் என, கருதப்படுகின்றது.
Peagles என்ற வகை நாய்களை வைத்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சுகாதார நிறுவனம் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதன்படி, நோயற்ற மனிதன் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உடையவரின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டன.
பின்னர் தகுந்த பயிற்சி அளித்த நாய்களைக் கொண்டு, இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நுரையீரல் புற்றுநோய் உடையவரின் ரத்த மாதிரிகளை நாய்கள் துல்லியமாக இனங்கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.