1,864 Views
அமெரிக்க டிஸ்னி நேச்சர் நிறுவனத்தின் தயாரிப்பான 'மங்கி கிங்டொம்' என்ற மேற்படி திரைப்படம், வோல்ட் டிஸ்னி ஸ்டூடியோஸ் மோசன் பிச்சர்ஸினால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மார்க் லின்பீல்ட் மற்றும் எலஸ்டயர் பொதர்கில் இயக்கிய இப்படம் வெளியாகி 28 நாட்களில் 14.8 மில்லியன் அமெ. டொலர்களை வசூலித்துள்ளது.
விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றுள்ளது இப்படம்.
சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் பொலன்நறுவைக் காடுகளில் காணப்படும் புராதன சிதைவுகளில் வாழும் குரங்குகள் தொடர்பிலானதாகும்.