இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் விருப்பைப் பெற்ற முன்னணி கதாநாயகரான தல அஜித், நேற்றைய தினம் தனது 48 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள், தத்தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்றைய நாளில் மட்டும், ட்விட்டர் வலைதளத்தில், தல அஜித் ட்ரெண்டாக மாறினார். ஏனைய பதிவுகளை விட தல அஜித்தை பாராட்டி, பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த பிரபலங்களின் பதிவுகள் அதிகமாக இருந்தன.
சுமார் 5.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள், நேற்றைய நாளில் தல அஜித்துக்காக டுவிட் செய்திருந்தனர்.
இதனால் நேற்று ட்விட்டர் வலைதளத்தில் தல அஜித் ட்ரெண்டாக மாறியிருந்தார். இது தல ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோசத்தை தந்திருந்தது.