சிறுமி ஒருவரின் வீடியோ ஒன்று தற்போது மிகவும் வைரலாக, பலராலும் பார்வையிட்டு பகிரப்பட்டு வருகின்றது.
அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்று யோசிப்பீர்கள். குறித்த சிறுமி தன் வீட்டில் வளர்த்து வந்த கிளிக்கு தன்னை (சிறுமியை ) யாரவது தாக்கவந்தால், தான் கத்தும்போது தன்னை தாக்கிய நபரை தாக்கும்படி குறித்த கிளிக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.
அதே போன்றே குறித்த சிறுமி தன்னை யாரோ தாக்க வருகிறார்கள், தனக்கு ஆபத்து வந்து விட்டது போன்று சத்தம் போடுகிறாள். அந்தநேரம் குறித்த கிளி உடனடியாக அருகில் இருந்தவரை பறந்து தாக்குகின்றது. இந்த வீடியோவே பெரும் வைரலாக பரவி வருகின்றது.