இடோகா' என்ற விண்கல்லின் மாதிரிகளை ஜப்பானிய விண்கலனான, 'ஹயபுசா' 2010ம் ஆண்டு பூமிக்கு அனுப்பியது. அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் விண்கல்லில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், அந்த விண்கல்லில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டறிந்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.பூமியில் தண்ணீர் இருப்பதற்குக் காரணமே, பல கோடி ஆண்டுகளுக்கு முன், பல மைல் அகலமுள்ள விண்கற்கள் தாக்கியது தான் என்று சில விஞ்ஞானிகள் சொல்வார்கள். இடோகாவில் இருப்பதாக சொல்லப்படும் தண்ணீர் தடயம், அந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.