இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் மனதில் தனக்கான தனியான இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை காஜல் அகர்வால், அடுத்து எந்தத் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் பல ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால், அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ளார். அதன்போது, சினிமாவில் தற்போது அதிக போட்டித்தன்மை நிலவுவதாக, அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக தமிழ் சினிமாவில் தற்போது புதுமுகமாக அறிமுகமாகும் நடிகைகள், மிகுந்த திறமையுடன் செயல்படுவதாக குறிப்பிட்ட காஜல் அகர்வால், அவர்களுக்கு இணையாக எமது திறமையை வெளிக்காட்ட தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.