தெரு நாயைக் காப்பாற்றிய பெண், பரிதாபமாக மரணம்
Sooriyan Gossip - தெரு நாயைக் காப்பாற்றிய பெண், பரிதாபமாக மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
பிலிப்பைன்ஸில் உள்ள தெரு நாய் ஒன்றை காப்பாற்றிய இளம் பெண்ணொருவர், அந்த நாயிடமிருந்து
Rabies நோய் தொற்றியதை அடுத்து, பரிதாபமாக மரணித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நோர்வே நாட்டைச் சேர்ந்த குறித்த இளம்பெண், 24 வயதானவர் என்று தெரியவந்துள்ளது. தனது நண்பர்களுடன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்ற குறித்த பெண், தெருவில் நாய்க்குட்டி ஒன்றினை கண்டு மீட்டெடுத்துள்ளார்.
அந்த நாய்க்குட்டியை தன்னுடைய இடத்திற்கு கொண்டு சென்று போதுமான அளவு உணவுகளைக் கொடுத்த அவர்,
மீண்டும் நோர்வே நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த இளம்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமானது. முறையான சிகிச்சைகளை வழங்குவதற்கு முன்னரே குறித்த இளம்பெண், பரிதாபமாக பலியானார்.
இவரது மரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் படி, Rabies நோய் தொற்று ஏற்பட்டு, மூளை மற்றும் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு, இவர் மரணித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.