1,722 Views

மேலும் விபத்தில் காயமடைந்த குறித்த தம்பதிகளின் புதல்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் பயணித்த காரை, இராணுவ டிரக் வண்டியொன்று மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது டிரக் வண்டியின் இராணுவ சாரதி குடிபோதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவையைச் சேர்ந்த 54 வயதான அனில் முனசிங்க இலங்கை போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் சாரதியும், அவரது மனைவியான மல்காந்தி எனப்படும் ஆசிரியையுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களின் மகனின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இரண்டு பேர் காரில் பயணித்ததாகவும் அவர்கள் விபத்திலிருந்து தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.