எங்கள் சீயான் விக்ரம் நடித்து முடித்துள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படம்,வெகு விரைவில் வெளிவரவுள்ள நிலையில், அவர் தற்போது 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'மகாவீர் கர்ணா' ஆகிய படங்களில் மிகவும் வேகமாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில்,விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படம், அதாவது விக்ரமின் 58வது படம்.
இந்தத் திரைப்படத்தினை இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ளார்.இவர் 'டிமாண்டி காலனி' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களை இயக்கியவர்.
மேலும் இந்தப் படத்தினை, செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.
ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கும் எனவும், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திரைப்படத்தை வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் ,திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தில் நடிக்கவுள்ளவர்கள் பற்றிய விபரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.