அமெரிக்காவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ஒன்றில் மாணவர்களின் கல்வி கடனை தானே செலுத்துகிறேன் என்று, தொழிலதிபர் ஒருவர் தெரிவித்தமை குறித்த மாணவர்கள் மத்தியில் பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தொழில் அதிபரான ''ராபர்ட் எஃப் ஸ்மித்'' அமெரிக்காவில் கோடீஸ்வரர் பட்டியலில் இருந்துவருகின்றார். இவர் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்மையில் மோர் ஹவுஸ் ஆண்கள் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு சென்றிருந்தார்.
அங்கு உரையாற்றிய ஸ்மித் "எங்கள் குடும்பம் 8 தலைமுறைகளாக இங்குள்ள பகுதியில் வசித்து வருகின்றார்கள். எனவே, இங்குள்ள 396 மாணவர்களின் கல்வி கடனை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று, அவர் அறிவித்ததும், அந்த அரங்கமே இன்ப அதிர்ச்சியில் மூழ்கியிருந்தது. இவரது இந்த அறிவிப்பை செவிமடுத்த மாணவர்கள், கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, இது குறித்து மாணவர்கள் கூறும்போது 'ஸ்மித்' அறிவித்ததை முதலில் எம்மால் நம்ப முடியவில்லை. அதன்பின் அதிகாரப்பூர்வமாக கல்லூரி நிர்வாகம் எங்களிடம் அறிவித்தது. இந்த அறிவிப்பால் நாங்கள் மிகுந்த சந்தோசம் அடைந்தோம். ஆனால், மிகவும் அதிக தொகையை தொழில் அதிபர் தானே ஏற்றுக் கொண்டமை பெரிய விடயம் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள்.