பொதுவாக சிறிய பிராணியாக இருக்கும் அணில், கனிகள் காய்களையே உண்பதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் ஒரு விசித்திர புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது. அதில், அணில் ஒன்று பாம்பை உண்ண முயல்கின்ற புகைப்படமே அந்த அதிர்ச்சியான புகைப்படம். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. பொதுவாக அணிலுக்கும் பாம்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டால் யார் ஜெயிப்பார்கள் என்றால், நிச்சயமாக பாம்புதான்.
இப்படி இருக்கும் நிலையில், தற்போது வைரல் ஆகிவரும் இந்தப் புகைப்படம், அமெரிக்க தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டதாகும். இந்த புகைப்படத்தை பதிவு செய்த அந்த பூங்காவில் உள்ள ஒருவர், அணில்கள், கொட்டைகள், விதைகள், பழங்கள், புல்லு போன்றவற்றை மட்டும் சாப்பிடும் என்று எண்ணாதீர்கள். ஆனால், அப்பாவியான மிருகம் கூட சில நேரம் உங்களை ஏமாற்றலாம். சில நேரம் பறவைகளின் முட்டை, பல்லி மற்றும் பாம்புகளை கூட சாப்பிடும் என்று அவர் தனது பதிவில் எழுதியிருந்தார்.
பாம்புக்கும் அணிலுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெறுவார்கள்? என்று கேள்வி எழுப்பிய அவர், குறித்த புகைப்படத்தில் உள்ள அணில் கிட்டத்தட்ட இரண்டு இன்ஞ் வரை பாம்பினை சாப்பிட்டுவிட்டது என்றும் எழுதி பதிவிட்டுள்ளார்.