2017 ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. 2018 ம் ஆண்டும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்துவழங்கினார்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி பலர் மனதில் இருந்தது, கடந்த நாட்களில் அதுவும் கமலே தொகுத்து வழங்குவார் என்பதை நிகழ்ச்சி முன்னோட்டம் மூலம் அறிந்திருந்தோம்.
எப்போது பிக் பாஸ் 3 ஆரம்பமாகும் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது ஜூன் 23 ம் திகதி விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகவுள்ளது. அனால் இன்னும் யார் போட்டியாளர்கள் என்ற உத்தியோகபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. இருப்பினும் எம்.எஸ்.பாஸ்கர்,சாக்ஷி அகர்வால், ஆலியா மானசா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள் என எதிப்பார்க்கப்படுகின்றது.