தாம் அணியும் ஆடைகளை தினமும் அயன் செய்யாமல் பெரும்பாலானவர்கள் போட மாட்டார்கள். அப்படி அலுவலகம் செல்லும்போது அவசரத்தில் அல்லது சில துணி வகைகளை அயன் செய்கிற பொழுது, கருகி விடும்.
கருகிய ஆடையை தூக்கி வீசினாலும், அயர்ன் Boxசின் அயன் செய்யும் பகுதி கருப்பாக இருந்தாலும், அதை நாம் தூக்கி வீச முடியாது. இப்படி இருக்கும் அயர்ன் Box நாளடைவில் மிகவும் கருப்பாக மாறிவிடும் அதேநேரம், நாம் மீண்டும் மீண்டும் ஆடைகளை அயன் செய்யும்போது அந்த ஆடைகளில் கறை படிந்து விடுவதை நாம் அவதானிக்கலாம்.
எனவே இப்படி இருக்கும் அயன் Box ற்கு என்ன செய்யலாம்? என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இந்தநிலையில், நாம் இப்படி இருக்கும் அயன் Boxல் இருக்கும் அந்த கறையை நீக்க சிறிதளவு உப்பு மட்டுமே போதும் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
நீங்கள் இதற்காக ஒரு வெள்ளை நிற டவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அயன் செய்யும் டேபிளின் மீது போடுங்கள். அந்த டவலின் மேல் அப்படியே ஒரு கைப்பிடியளவு உப்பை எடுத்து பூப்போல தூவி விடுங்கள். ஸ்டீம் போடாமல் சாதாரணமாக உப்பு தூவிய டவல் மேல் அயர்ன் Boxஸை வைத்து அயன் செய்யுங்கள். சில நிமிடங்கள் கழித்து சோல் பிளேட்டைத் திருப்பிப் பாருங்கள். உங்கள் அயர்ன் Boxசின் அடிப்பகுதி கறைகள் நீங்கி, பளிச்சென சுத்தமாக புதிது போல மாறியிருக்கும்.
ட்ரை பண்ணிப் பாருங்கள் - கண்டிப்பாக உங்கள் அயன் boxல் இருந்த துணிக்கறை நீங்கி அது புதியது போன்று மாறி இருக்கும்