அர்செனல் கால்பந்து அணியின் விளையாட்டு வீரர் மேசுட் ஒஸிலிக்கும் அவரது காதலியும் முன்னால் மிஸ் அமினி குல்செலிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்விற்கு துருக்கிய அதிபர் தயிப் எர்டோகனை தனது மாப்பிள்ளை தோழனாக அழைக்கப் போவதாக ஒஸில் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
இந்த விடயம் துருக்கியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அத்துடன் குறித்த கால்பந்து வீரரின் திருமணத்தில், துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள்
பங்குகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கால்பந்து வீரர் மேசுட் ஓஸிலின் திருமணத்தை மாப்பிள்ளை தோழனாக இருந்து துருக்கிய அதிபர் நடத்தி வைத்துள்ளார்.
எவ்வாறான போதிலும் கடந்த ஆண்டு உலகப் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு முன்பு, துருக்கிய அதிபர் தயிப் எர்டோகனுடன் எடுத்துகொண்ட புகைப்படம் சர்ச்சைக்குள்ளானது. இந்த புகைப்படங்கள் மூலம் ஜெர்மனியில், தான் அனுபவித்த இனவெறியை சுட்டிக்காட்டி அவர், கால்பந்து போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.