ISIS captures Palmyra - சிரியாவின் சரித்திரப்புகழ் பெற்ற நகரம் ISIS தீவிரவாதிகளினால் அபாயத்தில் !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,720 Views
2000 ஆண்டுகள் பழமையான சரித்திரப்புகழ் பெற்ற சிரியநகரம் ஒன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசம் வீழ்ந்ததை அடுத்து அங்கேயுள்ள பண்டைய சிற்பங்கள் மற்றும் சரித்திர சின்னங்கள் அழிக்கப்பட்டுவிடலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. சிரிய இராணுவத்தோடு கடுமையான மோதலில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஒவ்வொரு சிரிய நகராக தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர்.
இந்த 2000 ஆண்டுகள் பழமையான பல்மைரா நகரம், அந்தக் காலகட்டத்தில் ரோமானியர்களால் கட்டப்பட்ட அழகிய அரண்மனைகள், சிலைகள், திரையரங்குகளால் உலகப்புகழ் பெற்றதாகும்.
இதுவரை உலகின் கண்களில் பல்மைரா நகரின் புராதனத் தோற்றங்கள்
ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமையம் இந்த நகரின் அரும்பெரும் பண்டைப் பொக்கிஷங்களை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிரவேசம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாங்கள் கைப்பற்றிய நகரங்களில் புராதனப் பிரசித்தி பெற்ற கட்டடங்கள், சிலைகள் போன்றவற்றை அழித்தமை நினைவுகூரத்தக்கது.
ஐ.எஸ்.ஐ.எஸ் கொடி பறக்கும் பல்மைரா
கைப்பற்றிய உடனேயே தங்கள் கறுப்புக் கொடியை பால்மைரா நகரின் ரோமத் திரையரங்கக் கட்டடத்தின் உச்சியிலேற்றியுள்ளமையை தங்களது ஊடகங்கள் மூலமாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.