விக்ரமுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்த பசுபதி மீண்டும் இணைந்து ரசிகர்களை குஷிப்படுத்த இருக்கிறார்.
விக்ரம் நடித்த தூள்,அருள் ,மஜா ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படங்களுக்கு பிறகு அவர் வில்லன் வேடத்திலிருந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.
இவருடைய நடிப்பில் வந்த வெயில்,குசேலன் ,வெடிகுண்டு முருகேசு போன்ற படங்களை குறிப்பிடலாம் .ஆனால் அதில் சில படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை, இதனால் பசுபதியின் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன, இந்த நிலையில் இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் காமடியாக நடித்திருந்தார் இந்தப்படம் கொஞ்சம் அவருக்கு கைகொடுத்திருந்தது.
இதை அடுத்து இந்திய பாகிஸ்தான் படத்திலும் நடித்திருந்தார்.இப்போது விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் வித்தியாசமான நடிப்பில் நடித்து வருகிறார்.
முன்னர் விக்ரமுடன் இணைந்து நடித்த படங்களை போன்று இந்தப்படமும் தனக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று
பசுபதி குறிப்பிட்டுள்ளார்.