நம்மவர்களின் படைப்புக்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ''தோட்டாவின் தோரணை'' எனும் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு ''தோட்டாவின் தோரணை'' திரைப்படம் வவுனியா ''வசந்தி திரை அரங்கில்'' காட்சிப்படுத்த படக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தமது படைப்பை பார்வையிட அனைவருக்கும் அன்போடு படக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் திருகோணமலையில் ''தோட்டாவின் தோரணை'' திரையிடப்படும்.