இந்த பட்டியலில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். இவர் 2019ம் ஆண்டில் 252 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் அக்ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் உள்ளனர்.
நான்காவது இடத்தில் அமிதாப் பச்சன், ஐந்தாவது இடத்தில் தோனி உள்ளனர். 6-ம் இடத்தில் நடிகர் ஷாருக்கான் இடம்பெற்றுள்ளார்.ஏழாம் இடத்தில் நடிகர் ரன்வீர் சிங், எட்டாம் இடத்தில் நடிகை ஆலியா பட்,
9-ம் இடத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் இடம்பெற்றுள்ளனர்.
அதிகமாக பாலிவுட் நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் கொண்டுள்ள இந்த பட்டியலில் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்களும் இடம்பிடித்துள்ளனர் நடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தை பிடித்துள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் 16வது இடத்தையும், நடிகர் விஜய் 47வது இடத்தையும் பிடித்துள்ளார். நடிகர் அஜித் 52வது இடத்தையும், தனுஷ் 64வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேபோல், இயக்குநர் ஷங்கர், சிவா, கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.