இயற்கை விவசாயத்திற்காகவே வாழ்ந்து, பின்னரான காலங்களில் அதன் அடையாளமாகவே மாறியவர் பெருமைக்குரிய நம்மாழ்வார். மனிதர்கள் எப்போதும் இயற்கை மருத்துவம், நஞ்சில்லா உணவு என ஆரோக்கியமான வாழ்க்கையினை கொண்டாட இயற்கையோடு இணைந்த வாழ்வை முன்னெடுக்க வேண்டும் என்று விரும்பியவர் நம்மாழ்வார்.
பூச்சியினங்கள் தாக்காத பாரம்பரிய விதையினங்களை பயன்படுத்த வேண்டும், மரங்களை அழிப்பதால் மழை வீழ்ச்சி குறைவடையும் இதனால் வேளாண்மை பாதிக்கப்படும் எனவே இயற்கையான காடுகளை வளர்த்து காலநிலைகளில் ஏற்படும் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்றவாறு பல பரப்புரைகளைச் செய்தவர்.
இவரின் வாழ்க்கை முறையினை இப்போதும் பின்பற்றுபவர்கள் ஏராளம் உள்ளனர். நமது இலங்கையிலும் இவரின் கொள்கைகள் கொண்ட விவசாய அமைப்புக்கள் உள்ளன என்பது விசேடமானதாகும். இப்படியாக இயற்கையின் தந்தை என அழைக்கப்படும் நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினம் இன்றாகும்