சாருஹாசனின் பிறந்தநாளுக்கு கமல், பாடல் பாடி அசத்திய காணொளி, இப்போது பலராலும் பார்த்து பகிரப்பட்டு வருகின்றது.
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன். அவர் 90வது பிறந்ததினத்தை கடந்த 5ம் திகதி கொண்டாடி இருந்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கமலின் வீட்டில், இந்த பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது.
இதில் கமலின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்றி, இளையராஜா, லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சாருஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இந்த பிறந்தநாள் நிகழ்வில், ''குணா'' திரைப்படத்தில் இடம்பெற்ற, ''பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க.. காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க..'' என்ற பாடலை கமல் பாடி சாருஹாசனை வாழ்த்தினார். இந்தக் காணொளி சமூகவலைதளங்களில் பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றது.