பூமியின் சுழற்சியில் மாற்றம் - ஜூன் மாதத்தின் கால அட்டவணையில் ஒரு வினாடி அதிகரிப்பு.....
பூமியுடைய சுழற்சியானது வழக்கத்தை விட ஒரு வினாடி குறைவதால் ஜூன் மாதம் ஒரு வினாடி நீண்ட மாதமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கடிகாரங்களின் அதாவது பூமியிலுள்ள கடிகாரங்களின் நேரத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 00:00:00 என்று உங்கள் கடிகாரம் காட்டுவதற்கு பதிலாக
23:59:60 என்று இருக்கும் என்று விஞ்சானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த கூடுதல் வினாடி முறையினை 1976 இல் இருந்து உபயோகித்து வருகின்றனர், அத்தோடு இதுவரை 26 தடவைகள் இந்த நேரமாற்றம் இடம்பெற்றுள்ளன இதற்க்கான முக்கிய காரணம் சந்திரன் ,பூமி ஆகிய கோள்களுக்கிடையில் இருக்கின்ற புவியீர்ப்பு விசையினால் ஏற்படும் அலைகளினால் பூமியுடைய சுழல்கின்ற வேகமானது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது இதனால்தான் இந்த நேரமாற்றமாகும்.
நாசாவுடைய கணிப்பின் படி இறுதியாக சரியாக 24 மணி நேரமும் கணித்த ஆண்டாக,அதாவது 24 மணி நேரம் சரியாக நிகழ்ந்த ஆண்டாக 1820ஆம் ஆண்டை குறிப்பிட்டுள்ளனர். 24 மணி நேரம் என்பது 86400 வினாடிகளாகும்.