அமெரிக்காவிலிருந்து ஆரம்பித்த ஐஸ் குளியல் சவாலுக்கு - Ice Bucket Challenge உலகம் முழுக்கக் கிடைத்த வரவேற்பு அது ஆரம்பித்த நல்ல விழிப்புணர்வு நோக்கத்தினால்.
அதே போல இந்தியாவிலிருந்து ஆரம்பித்துள்ளது இந்த அரிசி வாளி சவால் - Rice Bucket Challenge.
ஜஸ் பக்கெட் சவால் எவ்வாறு ஒரு நல்ல நோக்கத்திற்காக பயன்பட்டதோ அதே போல தான் இந்த 'ரைஸ் பக்கெட் சவாலும்' என கூறுகிறார் மஞ்சு.

ம்ம்...சூப்பரான ஒரு ஐடியா தான், இதை அறிமுகப்படுத்தியவர் ஹைதரபாத்தைச் சேர்ந்த மஞ்சு லதா கலாநிதி என்ற பெண், எப்படி ஐஸ் பக்கெட் சவால் உலகம் முழுவதும் பிரபலமானதோ அதே போல இந்த சவாலும் இப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாத ஏழை எளியவர்களுக்கு ஒரு கைபிடி அரிசியாவது கொடுக்கும் சவால் தான் இது.
ரைஸ் பக்கெட் சவாலுக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள
Facebook பக்கத்தில், இந்த சவாலில் பங்குபற்றுபவர்களின் புகைபடங்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு உதவி செய்பவர்கள் ஒரு புகைப்படமெடுத்து அதனை அனுப்பி வைத்தால் அவர்களின் படமும் இப்பக்கத்தில் வருகிறது.
https://www.facebook.com/ricebucketchallenge

அப்படி அரிசி கொடுக்க முடியாதவர்கள்.. அருகிலுள்ள அரச மருத்துவமனைக்கு 100 ரூபாவிற்கு மருந்து வாங்கி கொடுக்கலாம்.
ஐஸ் பக்கெட் சவாலை விட இது மிகவும் இலகுவானது என கூறுகிறார் மஞ்சு.
மஞ்சுவின் இந்த முயற்சிக்கு பலர் ஆதரவு வழங்க ஆரம்பித்துள்ளனர். நல்ல முயற்சிதானே நாமும் பாராட்டுவோம்.
அத்துடன் இப்படியான முயற்சிகளை நாமும் எங்கள் நாட்டிலும் எங்கள் பிரதேசங்களிலும் ஏன் முன்னெடுக்கக்கூடாது?
வறியவர்களுக்கு அரிசி வழங்கலாம் ;
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர் கூட வழங்கலாம்.
முன்னெடுப்போமா?
சவாலுக்குத் தயாரா?