உலகிலுள்ள இளைய சமுதாயத்தின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் 'என்ரிக் இக்லேஷியஸ்'.
லத்தீன் அமெரிக்க பொப் பாடகரான இவர் அருமையான நடனக் கலைஞரும் கூட.

தன் பாடும் திறமையால் மட்டுமல்லாது, தோற்றத்தினாலும் அனைவரையும் கவர்ந்தவர் என்பது அதிகமானோர் அறிந்த விடயம்.
இவரின் தாயார் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா??
'என்ரிக் இக்லேஷியஸ்' இன் தாயார் இசபெல் ப்ரைஸ்ளர்.
வயது 63.
ஆனால் என்ரிக் போலவே இப்போதும் இளமைத் தோற்றத்துடன் காணப்படுகிறார். 63 வயதுடையவர் என யாராலும் கூறமுடியாத அளவுக்கு அவருடைய தோற்றம் இளமையாக காணப்படுகிறது.
இவர் தன்னுடைய இளம் வயதிலிருந்தே மொடலிங்கில் ஈடுபடுபவர் என்பது குறிப்பிடதக்க ஒரு விடயம். 1970ம் ஆண்டு திருமண பந்தத்தில்இணைந்துகொண்ட 'இசபெல் ப்ரைஸ்ளர்' எனும் இவருக்கு என்ரிக் இக்லேஷியஸ் உடன் சேர்த்து மூன்று பிள்ளைகள்.
தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் கடமையாற்றும் இசபெல்லின் புகைப்படங்கள் வெளியானது முதல்,மகனைப் போலவே தாயும் இப்போது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவராக மாறியுள்ளார்.
இனிமேலாவது தோற்றத்தை பார்த்து வயதை எடைபோடாமலிருக்க முயற்சி செய்வோம்.