இளைய தளபதி விஜய் நடிப்பில் அனைவரும் புலி படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தை பற்றி இன்று வரை ஒரு துளி செய்தி கூட வெளியாகவில்லை.
ஏனெனில் படப்பிடிப்பு தொடங்கும் போதே விஜய், எல்லோரையும் அழைத்து படம் முடியும் வரை யாரிடமும் எதையும் கூற வேண்டாம் என்றாராம். காரணம், நீங்கள் ஒன்று கூற போய், அவர்கள் ஏதேதோ எழுத பெரிய வில்லங்கத்தில் வந்து நிற்கும். அதனால், படத்தை பற்றிய எந்த தகவலும் வெளியே தெரிவிக்க கூடாது என்று கூறி விட்டாராம். தற்போது எல்லோருடைய கேள்வியும் அப்படி என்ன ரகசியம் மறைந்திருக்கும் என்பது தான்.
அதை அறியத்தான் நாங்களும் முயன்று வருகிறோம். இன்னும் கிடைக்கவில்லை. பார்க்கலாம், வரத்தானே வேணும்..!!
-கோடம்பாக்கக் குருவி-