18,735 Views
இந்திய அளவில் சொத்து வருமானம் மற்றும் செல்வாக்கு நிறைந்த 100பிரபலங்களின் விபரங்களையும், அவர்களுக்கான தரவரிசைப் பட்டியலையும் "போர்ப்ஸ் இந்தியா" பத்திரிகை வெளியிட்டுள்ளது.இந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின்படி.....
இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் என்ற மிகமுக்கிய இடத்தை கடந்த ஆண்டு 242கோடி ரூபாவுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ள பொலிவுட் நடிகர் சல்மான் கான் பிடித்துள்ளார். அதேவேளை, 202கோடி ரூபா வருமானத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ள ஷாருக்கான் புகழ் பட்டியலில் ஏழாவது இடத்தை எட்டியுள்ளார்.
இந்தநிலையில், "போர்ப்ஸ் இந்தியா" பத்திரிகையின் இந்த தரவரிசைக்குள் வரும் தமிழ் நடிகர்களில், வருமானத்தின் அடிப்படையில் நம்ம 'தல'அஜித் 19-வது இடத்தில் சிம்மாசனம் போட்டிருக்கிறார். இருந்தும் நாடளாவியரீதியிலான புகழ் என்ற அடிப்படையில் 98-வது இடம் கிடைத்திருக்கிறது அஜித்திற்கு.
அதேவேளை, வருமானத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள நம்ம 'இளையதளபதி' விஜய் புகழ் என்ற ரீதியில் 80-வது இடத்தில் நிலைகொண்டிருக்கிறாராம். இவருக்கு அடுத்து, வருமானத்தில் 21ம் இடத்தில் இருக்கும் எங்க 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் புகழ் மற்றும் செல்வாக்கைப் பொறுத்தவரையில் 89-ம் இடத்திலும் இருப்பதாக 'போர்ப்ஸ் இந்தியா' பத்திரிகைத் தரவரிசைப் பட்டியல் சொல்கிறது.
*S. G. R