முனியின் மூன்றாம் பாகமான கங்காவை இயக்குவதில், மும்முரமாக ஈடுபட்டுவரும் நடிகரும் இயக்குனருமான ராகவா லோரன்ஸ், தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
படத்துக்கு, ஒரு டிக்கெட்டில இரண்டு படம் என்று பெயர் வைத்துள்ளார்.
இதில் இரண்டு திரைக் காவியங்களை தீட்டியிருக்கிறேன். முதல் பாதி ஒரு படமாகவும், அடுத்த பகுதி இன்னொரு படமாகவும் திரைக்கு வர இருக்கிறது. முதல் பாதியில் கிழவன் என்றும், இரண்டாவது பாதியில் கருப்புதுரை என்றும் பெயரிட்டுள்ளேன் என்கிறார் லோரன்ஸ்.
"வழமையை விட கொஞ்சம் புதுமையோடு வரவுள்ள இந்தப்படத்தில், முதல் கதையில் எனக்கு ஜோடியாக ராய் லட்சுமியும், இரண்டாவதில் அண்ட்ரியாவையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
புதுமுகம் லியோன் இசை வழங்குகிறார். 50 வயதான வயதானவரின் கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன்" என்கிறார் பெருமையோடு லோரன்ஸ்.