11,685 Views
திருமணத்துக்கு முரணான உறவுகளை இணைத்து வந்த , அதாவது முறையற்ற உறவுகளை தேடி அலையும் ஆண் மற்றும் பெண்களை தொடர்புபடுத்தி வந்த பிரபல இணையதளம் ஏஷ்லி மெடிசன் அண்மையில் ஹெக் செய்யப்பட்ட து.
இந்த இணையதளத்தில் ஆண், பெண் இருபாலரும் சேர்த்து சுமார் மூன்று கோடியே 20 இலட்சம் வாடிக்கையாளர்கள் அங்கத்தினராக உள்ளனர். இவர்கள் அனைவரின் அந்தரங்கத்தையும் பாதுகாத்து வந்தது ஏஷ்லி மெடிசன். மேற்படி தள த்தில் அண்மையில் நுழைந்த ஊடுருவல்காரர்கள் வாடிக்கையாளர்களின் பெயர் விபரம், அவர்களில் யார், யார், எத்தனை பேருடன் தொடர்பில் இருந்தனர்?, இதற்கான பணப் பரிமாற்றம்ஒன்லைன் மூலம் எப்படி நடைபெற்றது? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் திருடி விட்டனர். இந்த தகவல்களை வைத்து அந்த கும்பல் ‘ஏஷ்லி மெடிசன்’ நிர்வாகத்தை மிரட்டி வருவதாகவும் தகவல் கசிந்தது.
இதையடுத்து, அவ் வாடிக்கையாளர்களின் தொலைபேசி இலக்கம் உட்பட திருடிய அனைத்து விவரங்களையும் அந்த ஊடுருவல்கார ர்கள் இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளதாக பிரபல தொழில்நுட்ப வார சஞ்சிகையொன்று கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி ‘ஏஷ்லி மெடிசன்’ அங்கத்தினர்களான ஆண், பெண் வாடிக்கையாளர்களிடையே பீதியை ஏற்படுத்த தொடங்கியது.
இந்நிலையில், சமீபத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கும், ஏஷ்லி மெடிசன் தளத்தின் முரணற்ற விவரங்கள் இணையத்தில் அம்பலமானதற்கும் தொடர்பு இருப்பதாக டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தற்கொலை செய்து கொண்டவர்கள் குறித்த விவரங்களை அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
ஏஷ்லி மெடிசன் சம்பவம் மேலும் பல குடும்பங்களை காவு வாங்கக் காத்திருப்பதாக பல சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.