806 Views
சில நாள் முன்பு ரீமேக் காலம் இருந்தது..
இப்போது டிஜிட்டல் காலம்.
ஆமாம் முன்னைய பிரபல திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் மெருகு படுத்தி மீண்டும் திரையிடும் காலம்.
நடிகர் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், வசந்த மாளிகை, திருவிளையாடல் போன்ற படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டிருந்தது. அப்படங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
இந்நிலையில் தற்போது 1973ம் ஆண்டு வெளிவந்த ராஜபார்ட் ரங்கத்துரை படமும் டிஜிட்டல் படுத்தப்பட்டு வருகிறது. வி.சி-.குகநாதன் தயாரித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கி இருந்தார். சிவாஜியுடன் உஷா நந்தினி, நம்பியார், வி.கே.ராமசாமி, மனோரமா, டி.கே.பகவதி நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம் பெற்ற “அம்மம்மா தம்பி என்று நம்பி” மற்றும் “ஜின்சினுக்கா சின்னக்கிளி” பாடல்கள் இன்றுவரை அனைவரும் ரசிப்பவை.இப்போது ராஜபார்ட் ரங்கத்துரையை அபி சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தார் டிஜிட்டலில் மெருகூட்டி வருகிறார்கள்.
இப்படம் நவம்பரில் ரிலீசாகும் என்று தெரிகிறது.