3,398 Views
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிலிருந்து இலட்சக் கணக்கான மக்கள் அக்கம்பக்கம் உள்ள நாடுகளில் குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில் புகலிடம் தேடி வந்த சிறுவனொருவன் தனது செல்ல நாயைப் பிரிய மனமில்லாமல், அதையும் சுமார் ஐநூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கிக் கொண்டு வந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளான்.
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் நகரத்தைச் சேர்ந்த அஸ்லான்(17), கிரீஸ் நாட்டின் தீவான லெஸ்போஸுக்கு வந்தடைந்தபோது, ஐக்கிய நாடுகள் அகதிகள் மறுவாழ்வு குழு அவனை சந்தித்தது. அப்போது, அஸ்லான் தன்னுடன் தனது செல்ல நாய் ரோஸீ மற்றும்கடவுச்சீட்டை காண்பித்து அந்நாட்டில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டார்.