5,622 Views
அப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் ஆகியன விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளன.
கடந்த வெளிக்கிழமை ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா , அவுஸ்திரேலியா, சீனா உட்பட 12 நாடுகளில் புதிய ஐபோன்கள் விற்பனைக்கு வந்திருந்தன.
இவ்வாறு விற்பனைக்கு வந்து முதல் வாரத்தில் 13 மில்லியன் ஐபோன்கள் விற்பனையாகியுள்ளதாக அப்பிள் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 இல் விற்பனைக்கு வந்த ஐபோன் 6 முதல் வாரத்தில் 10 மில்லியன் விற்பனையாகியமையே சாதனையாக இருந்தது. இந்நிலையில் தற்போது அச்சாதனையை புதிய மாதிரிகள் முந்தியுள்ளன.
அடுத்தவாரம் மேலும் 40 நாடுகளில் விற்பனைக்கு புதிய ஐபோன்கள் வரவுள்ளன. மேலும் இவ்வருட இறுதியில் 130 நாடுகளில் ஐபோனின் புதிய மாதிரிகள் விற்பனைக்கு வரவுள்ளன.
கடந்த வருடங்களை விட இவ்வருடம் ஐபோன்களை வாங்குவதற்கு மக்களின் கூட்டம் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்ட து.
எனினும் விற்பனையில் எவ்வித வீழ்ச்சியும் இருக்கவில்லையெனவும் , பலர் இணையத்தினூடாக கொள்வனவில் ஈடுபட்டமையே ஐபோன் சிறப்புக் கடைகள் முன் கூட்டம் குறைந்து காணப்பட்டமைக்கான காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முப்பரிமாண தொடுதிரை , 12 மெகாபிக்ஸல் கெமெரா , முன்னைய மாதிரிகளை விட வேகமான செயற்பாடு என ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் ஆகியன நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிகின்றன.