சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில், இன்று காலை வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 25 இடங்களிலும், மதுரை, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட மொத்தம் 32 இடங்களிலும் வருமானவரி சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், புலி படத்தின் தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார் படத்தில் கணக்கில் வராத கறுப்பு பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், இதனால் அனைத்து புலி படக் குழுவினரிடமும் சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே புலி திரைப்படம் நாளை வெளிவரவுள்ளதால் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி: இந்திய ஊடகம்