7,192 Views
பின்னர் அவர் பொலிஸ் அதிகாரியொருவரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தார்.
மாலை 5.30 மணியளவில் வங்கிக்கு சென்ற அவர் வங்கி பண வைப்பு சீட்டில் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகவும் , அனைத்து பணத்தையும் தருமாறும் , அபாய சமிக்ஞையை அழுத்தினால் சுட்டுவிடுவேன் எனவும் எழுதி அதனை வங்கி உத்தியோகத்தரிடம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து பயந்த வங்கியில் இருந்த பெண் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து தப்பிச் சென்ற அந்நபரை வங்கியின் அருகில் கடமையில் இருந்த பாணந்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் மடக்கிப் பிடித்துள்ளார்.
குறித்த கொள்ளைச் சம்பவம் வங்கியின் சி.சி.டிவி கெமெராவில் பதிவாகியுள்ளது.
மேற்படி கொள்ளையில் ஈடுபட்டவர் மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த , மொஸ்கோவில் மருத்துவ கல்வியைக் கற்ற 24 வயதான இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.