யால சரணாலயம் உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வனவிலங்கு காரியாலயங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கதிர்காம் வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்திற்கு மாத்திரம் 40 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர. கடகமுவ, கொச்சிபத்தான, ஒண்டச்சிய மற்றும் பானம பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் வனப்பகுதிகளில் வேட்டையாடுவதற்கு சென்ற சிலர் மீது வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானார்.
ஆயுதம் தரித்த சிலர் அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்தே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.