தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் தனது திறமையை காட்டிக்கொண்டிருக்கும் ஆந்திரத்து அழகியான
தமன்னா, படப்பிடிப்புக்கு முழுக்குப்போட முடிவு செய்துள்ளாராம்.
கடந்த சில மாதங்களாக தமிழ்,தெலுங்கு,இந்தி என மாறி மாறி தொடர்ச்சியான படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வந்துள்ளார். நடிப்பில் அக்கறை காட்டிய காரணத்தினால் தனது குடும்பத்தில் அக்கறைகாட்ட முடியவில்லை தமன்னாவுக்கு. இதனால் குடும்பத்தில் இடம்பெற்ற பல நிகழ்ச்சிகளில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அதைவிட உறவினர்களின் திருமணங்கள், தோழிகள் வீட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாம்.
இதனால் வீட்டாரின் கோபத்துக்கு ஆளானது மட்டுமல்லாமல்,உறவினர்கள் மத்தியிலும் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டதோடு, வேண்டப்பட்ட பலர் தமன்னாவுடன் பேசுவதையும் நிறுத்தி மனவேதனைக்கும் உள்ளாக்கியுள்ளார்கள்.
எனவே குடும்பத்தினருக்காகவும், உறவினர்களுக்காகவும் நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கில் ஓய்வில்லாமல் நடித்து வந்த அவர்,தற்போது படப்பிடிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். படப்பிடிப்பை ஒரு மாதம் தள்ளி வைக்கும்படியும் அந்தப்படங்களின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கேட்டுள்ளாராம். ஒரு மாத ஓய்வை முடித்து விட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லவுள்ள தமன்னா, அடுத்த வருடம் கோடை விடுமுறை வரை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல்.
ஒரு மாத ஓய்வில் இருக்கும் நாட்களில் உறவினர்கள், தோழிகள் வீட்டுக்கு செல்வது மற்றும் அவர்களுடன் விருந்து, கொண்டாட்டம், நிகழ்ச்சிகள் நடத்துவது என தினமும் வீட்டை அமர்க்களப்படுத்தப் போகிறாராம் இந்த
தெலுங்கு தேசச் சிங்காரி.
ரசிகர்களுக்கு மட்டும் தான் தீபாவளியா......?
உங்களுக்கு வேண்டாமா...?"
சொந்தங்களோடு கொளுத்துங்க பட்டாசு...