அரசியல் காரணங்களால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் நெருக்கடிநிலை ஏற்படுவது சாதாரணமானது. ஆனால் அணைக்கட்டுகளால் சிலநாடுகள் பொருளாதார நெருக்கடியையும் சிக்கலையும் எதிர்கொண்டிருக்கின்றன என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா..?
1934-ம் ஆண்டுக்குப்பின் கட்டப்பட்ட 245அணைகள், அவை உள்ள நாடுகளுக்கு பெரும் பொருளாதாரச்சிக்கலை உண்டாக்கியிருப்பதாக லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பிரேசிலின் "பெல்மொண்ட்" அணைக்கட்டு, சீனாவின் "ஜின் ஷா" அணை, எதியோப்பியாவின்"ஜிப்"ஆகியன இந்த நெருக்கடி நிலைக்கு காரணமான அணைக்கட்டுகளில் பிரதானமானவையாக கருதப்படுகின்றனவாம்.
உலகிலேயே அதிக அணைக்கட்டுக்கள் சீனாவில் தான் காணப்படுகின்றன.அதேபோல அனைக்கட்டுக்களை கட்டும் முன்னணி நிறுவங்களும் கூட சீனாவில் தான் உள்ளனவாம்.தற்போது 70நாடுகளில் மேற்கொள்ளப்படும் 300 அணைக்கட்டுகள் கட்டும் வேலைகளை இந்த சீன நிறுவனங்களே மேற்கொள்கின்றனவாம்.
எங்கள் நாட்டிலும் சீனர்கள் அதிகமாக இப்போதெல்லாம் காணப்படுவதால் எங்கேயாவது அணை கட்டப்படுகிறதோ என்று கவனிப்போம்.