காலஞ்சென்ற வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடல் கொழும்பில் தனியார் மலர்சாலை ஒன்றில் இருந்து கோட்டே சிறி நாகவிகாரைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அவரது பூதவுடல் தாங்கிய விசேட வானூர்தி நேற்றிரவு 9 மணியளவில் சிங்கப்புரில் இருந்து கட்டுநாயக்க வானூர்தி தளத்தை வந்தடைந்தது.
அவரது இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாகவும் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
கோட்டே நாகவிகாரையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.