இணைவார்களா ரஹ்மான் , கார்த்தி?
Karthi and Rahman combo - இணைவார்களா ரஹ்மான் , கார்த்தி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தற்போது அதிகளவிலான மலையாள படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்று வருகிறது.
'சந்திரமுகி முதல் 'பாபநாசம்' வரை பல மலையாள ரீமேக் படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் தற்போது கோலிவுட் இயக்குனர்களின் பார்வை முழுவதும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வதில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 'பெங்களூர் டேய்ஸ்' உள்பட ஒருசில மலையாள மொழி திரைப்படங்கள் ரீமேக் ஆகிக்கொண்டு வரும் நிலையில், தற்போது Ennu Ninte Moideen என்ற சூப்பர் ஹிட் மலையாள படம் தமிழில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தில் கார்த்தி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படத்தில் முதன்முதலாக கார்த்தி நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்விராஜ், பார்வதி, உள்பட பலர் நடித்த Ennu Ninte Moideen படத்தை ஆர்.எஸ்.விமல் இயக்கியிருந்தார். ரூ.13 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.37.5 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: இந்திய ஊடகம்