9,711 Views
வேதாளம் திரைப்படம் வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கபட்டு வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படம் தொடர்பாக தகவலும் அரசல் புரசலாக கசிந்துள்ளது.
வேதாளம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மாத்திரம் 50 கோடி (இந்திய நாணயம்) வசூலித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தப டம் தொடர்பான தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவுள்ளது.
தற்போது மூட்டு சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்து , ஓய்வெடுத்து வருகிறார் அஜித். இந்நிலையில் அஜித் மீண்டும் இயக்குனர் சிவாவுடன் கை கோர்ப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இது வெளிநாட்டில் உள்ள 'டொன்' ஒருவர் தொடர்பான 'திரில்லர்' வகைக் கதையாம். ஏற்கனவே அஜித் 'டொன்' ஆக நடித்த படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் அடுத்த படமும் அவர் 'டொன் ஆக நடிக்க இருப்பதால் எதிர்ப்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. முக்கிய நடிகர்கள் பலர் நடிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அமிதாப் அல்லது அனில் கபூர் இருவரில் ஒருவர் நடிப்பார் என தெரியவருகின்றது.
மிகப் பிரமாண்ட முதலீட்டில் இப்படம் தயாரிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. வேதாளத்தின் வெற்றி அஜித் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் எனவே பெரிய முதலீட்டுக்கு பலர் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏ.ஜி.எஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கக்கூடுமெனவும் தெரியவருகின்றது. மேலும் அடுத்த வருடம் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.