Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
தெறிக்க வைக்க வேண்டிய நேரத்தில் தலையை சொறிய வைத்த விவகாரம்!

Theri movie name issue - தெறிக்க வைக்க வேண்டிய நேரத்தில் தலையை சொறிய வைத்த விவகாரம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18,992 Views

அட்லீ இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடித்துவருவது அனைவரும் அறிந்ததே.

 


நேற்றுவரை , 'தாறுமாறு' , காக்கி, சத்ரியன் ஐ.பி.எஸ், என பல பெயர்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

பலரும் தங்களது கற்பனை திறனுக்கேற்ப பல பெயர்களை எடுத்து விட்டுக்கொண்டிருக்க.

பொறுத்தது , போதுமென நேற்று படத்தின் பெயர் மற்றும் பெர்ஸ்ட் லூக் போஸ்டர் ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தது படக்குழு.

கையில் துப்பாக்கியுடன் விஜய் எகிறிப்பாய்வது , 'சப்வே சர்பர்' விளையாட்டில் வரும் பிரதான பாத்திரத்தைப் போல இருப்பதாகவும், அதுமட்டுமன்றி ஜில்லா தோற்றத்தையை  விஜய் 'கொப்பி' அடித்து விட்டதாக இணையத்தில் மரண கலாய்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. 

அது போல் அண்மையில் அஜித் நடிப்பில் வெளியாகிய வேதாளத்தில் அஜித் கூறிய 'தெறிக்க விடலாமா' என்ற வார்த்தையையே விஜய் பட பெயராக வைத்திருப்பதாக அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திலும், கலாய்ப்பிலும் திளைத்திருந்தனர்.

இந்நிலையில் தான் மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போல விஜய் உட்பட படக்குழுவுக்கும் , அவரது ரசிகர்களுக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஆம்,  தெறி படத்தின் தலைப்பு தன்னுடையது என இளம் இயக்குநர் சதிஷ் குமார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான சதீஷ் கடந்த செப்டம்பர் மாதம் 4 ம் திகதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் என்னுடைய முதல் படமான தெறி பற்றி அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் இது,அக்டோபர் முதல் ஷூட்டிங் தெறிக்கும் என்று பதிவிட்டிருக்கிறார்.

விஜய் படத்தின் தலைப்பு தெறி என்று படக்குழுவினர் அறிவித்த நிலையில் "3 மாதத்துக்கு முன்னால் நான் யோசித்து வைத்த தலைப்பிது. பெயர் எல்லாம் முறைப்படி பதிவு செய்தும் பதிவு புத்தகம் அவர்கள் வசம் இருக்கிறது என்பதற்காக பெயரை தாங்கள் பதிவு செய்த மாதிரி மாற்றிக் கொண்டுள்ளனர். இதற்காக நான் அவர்களிடம் சண்டை போடப்போவதில்லை, ஆனால் கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேன் " என்று கூறியிருக்கிறார்.

   

தற்போது இணையத்தில் இது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் மற்றும் கலாய்ப்புக்கள் நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளங்களில் பலரும் இளம் இயக்குநர் சதீஷ் குமாருக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அதேபோல் ' #StolenTheriTitleAndCopiedFL' என்ற ஹேஸ்டெக்கையும் உருவாக்கி டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.

தெறி தெறினு தெறிக்க விடுவாங்கனு , பார்த்த விஜய் ரசிகர்கள் பலரை சொறி சொறினு தலைய சொறிய வச்சுடீங்களே , அட்லீ…….





ஒருவேளை போஸ்டரில் விஜய் வாயை மூடுவதைப் போல காட்டப்பட்டிருப்பது பெயர் சர்ச்சையை வெளியே சொல்ல வேண்டாம் என்பதற்காகவோ???




Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top