இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியாகவுள்ளது.
Action, Thriller கதைக்களத்துடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் Teaser November மாதம் 28 ஆம் திகதி வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தின் First Single குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் First Single இம்மாதம் 27 ஆம் திகதி வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனால் தல இரசிகர்கள் First Single வருகைக்காக மகிழ்ச்சியோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.