மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தோமஸ், அனுராஜ் மனோகர் இயக்கும் நரி வேட்டை எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் சேரன், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சேரன் நடிக்கும் முதல் மலையாளத் திரைப்படம் இதுவாகும்
தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படம் ஒரு உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது இரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
அண்மையில் இந்தத் திரைப்படத்தின் First Single மின்னல்வாலா என்ற பாடலின் வீடியோ வெளியாகியிருந்தது. இந்நிலையில் மே மாதம் 16 ஆம் திகதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் திரைப்படத்தின் Trailer ஐ திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.