ராஜமௌலி இயக்கத்தில் வெளியான R.R.R திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி இருப்பவர் நடிகர் ராம் சரண். இவர் தற்போது 'பெத்தி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், லண்டனில் புகழ்பெற்ற Madame Tussauds அருங்காட்சியகத்தில் தத்ரூபமாக ராம் சரணுடைய மெழுகு சிலையை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள்.
இதில் சிறப்பு என்னவென்றால் அவருடைய நாய்குட்டியையும் சேர்த்து வடிவமைத்திருப்பதுதான்.
இதுமட்டுமல்லாமல் அவருடைய மகள், மெழுகு சிலையுடன் ராம் சரணைப் பார்த்து குழப்பத்துடனும் ஆச்சரியத்துடனும் அருகில் செல்லும் வீடியோ வெளியாகி தற்பொழுது வைரலாகி வருகிறது.