பெங்களூரு விஞ்ஞானிகள் அதிவேகமாக Charge ஆகும் மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் Sodium Ion Battery ஐ உருவாக்கியுள்ளனர்.
இது தற்போது பயன்பாட்டில் உள்ள Lithium , Ion தொழில்நுட்பத்திற்கு ஒரு மாற்றாக அமைகிறது.
எரிபொருள் செலவுகள் அதிகரித்து வரும் இக்காலத்திலும், காற்று மாசுபாடு அதிகரித்து வரும் சூழலிலும், மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
Lithium, Ion மாற்றுக்கான தேவை தற்போது அதிகமாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் மின்சார வாகனங்கள் தற்போது Lithium, Ion Batteryகளை பெரிதும் நம்பி உள்ளன.
இருப்பினும், உலகளாவிய Lithium விநியோகம் குறைவாக இருப்பதால், இந்த Batteryகளின் விலை அதிகமாக உள்ளது.
இந்த Battery வெறும் ஆறு நிமிடங்களில் 80% Charge அடையும் திறன் கொண்டதுடன், குறிப்பிடத்தக்க வகையில் நீண்ட ஆயுளையும் கொண்டுள்ளது.