தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அனுஷ்கா.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அனுஷ்கா.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘Miss ஷெட்டி MR பொலிஷெட்டி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா, காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். அடுத்த மாதம் 11 ஆம் திகதி இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் “சைலோரே” என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.