7,288 Views
தனது தந்தையின் மீது 16 வயதான பாடசாலை மாணவனொருவன் பொலிஸில் முறைப்பாடு செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கெப்பற்றிக்கொல்லேவ-கனுகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவனொருவனே கெப்பற்றிக்கொல்லேவ பொலிஸில் முறைப்பாட்டை அளித்துள்ளான்.
தனக்கும், தனது சிறு சகோதரி மற்றும் சகோதரனை தனது தந்தை எவ்விதத்திலும் கவனிப்பதில்லையென சிறுவன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளான்.
தனது தாய் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட தால் தமது பாடசாலைப் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் சகோதரன் மற்றும் சகோதரிக்கு உணவளிக்க க் கூட தந்தை உதவி செய்வதில்லை என அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.