9,321 Views
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் அதனை இணைத்து இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர்.
மேலும் மொசூல் நகர் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள யாஷ்டி இன பெண்களை கடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் அவர்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கி உள்ளனர் அவர்களை கும்பல் கும்பலாக அடைத்து வைத்து சித்ரவதை செய்து உள்ளனர்.
சிரியாவின் பாலைவன பகுதியில் பெண்களை அடைத்து வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடுமைப்படுத்திய இருண்ட நிலவறைகள் தற்போது கண்டு பிடிக்கபட்டு உள்ளன.
சாக்கடை மூடிகள் போல் மேல் மூடப்பட்டு இருந்த அவைகளை அகற்றி பார்க்கும் போது உள்ளே இருட்டறைகள் இருந்து உள்ளன.
ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த சிறைய மணல் சிறைகளினுள் யாஷ்டி இன பெண்களை அடைத்துவைத்து கொடுமை செய்து உள்ளனர்.