தமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்கு எதிராக 500 மில்லியன் ரூபாவை கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹிருனிகா பிரேமசந்திர இன்னமும் கைது செய்யப்படவில்லை என, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஆட்சிபீட மேறி ஒரு வருடம் பூர்த்தியடையவுள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்கட்சி எதிர்வரும் 2 ஆம் திகதி கறுப்பு கொடி வாரத்தை அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.