10,618 Views
பெண் ஊடகவியலாளரிடம் அவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது மேலும் சில முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆம் , ஆஸ்திரேலிய பெண்ணிடம் அவர் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்ட தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா-நியூசிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதன்போது, கெயில் உள்ளிட்ட மே.இ.தீவுகள் வீரர்களுக்கு உதவி செய்ய அவுஸ்திரேலிய பெண்மணி ஒருவரும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.
சம்பவத்தன்று, மே.இ.தீவுகள் வீரர்களின் உடைமாற்றும் அறைக்கு அந்த பெண்மணி, ' சென்விச்'சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். நாள் முழுவதும் சாப்பிடாமல் பணியில் கவனம் செலுத்தியதால் பசியோடு சென்ற பெண்மணி, சேன்ட்விஜ்ஜை தேடியுள்ளார்
அப்போது அங்கு கிறிஸ் கெயில் இடுப்பில் துண்டு மட்டும் கட்டிய நிலையில் அங்கு நின்றுள்ளார். பசியோடு சேன்ட்விஜ் தேடிய அந்த பெண்ணிடம் கெயில் மிக மோசமாக நடந்துகொண்ட தாகவும் , பாலியல் ரீதியில் மிகவும் கீழ்த்தரமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போதே, இந்த தகவல், அணி முகாமையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கெயில் பெயரை வெளியில் விடாமல் அவர் தவிர்த்துவிட்டுள்ளார். அதேநேரம், அனைத்து மே.இ.தீவுகள் வீரர்களுக்கும் அவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி, பெண் ஊழியர்களிடம் மரியாதையோடு நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், தொகுப்பாளரொருவரிடம், கெயில் நடந்த விதத்தை பார்த்து கோபப்பட்ட அந்த பெண்மணி, தற்போது ஊடகமொன்றிடம் பழைய நிகழ்வை தெரிவித்துள்ளார்.
வீட்டை விடுதியாக்கிய கெயில் (படங்கள்): இங்கு