Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
06
இலங்கையின் இசை நட்சத்திரம் - இசைப்புயலுடன் இணையும் பெரும் தருணம்

Aaryan Dinesh performance in "Nenje Ezhu' concert by A.R. Rahman. - இலங்கையின் இசை நட்சத்திரம் - இசைப்புயலுடன் இணையும் பெரும் தருணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,499 Views
Naam Oru - Cross Culture (நாம் ஒரு - குறுக்கு கலாச்சாரம்) எனும் தனி இசை ஆல்பத்தின் மூலம் தன் இசைப்பணியை  ஆரம்பித்தவரே தற்போது புகழ்பெற்ற, எல்லோராலும் ADK என அழைக்கப்படும் ஆரியன் தினேஷ் கனகரட்னம் ஆவார்.
நம் நாட்டு இசைக்கலைஞரான இவர் 2012 இல் அகாடமிக் மற்றும் கிராமிய விருதுளின் சொந்தக்காரரான இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்றிய முதல் இலங்கை ராப் இசைக்கலைஞர் என்ற பெருமைக்குரியவர். இந்தியாவில் தலைசிறந்த திரைப்பட இயக்குனர்களுள் ஒருவரான மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் உருவான 'கடல்' திரைப்படத்தில் இடம்பெற்ற “மகுடி” பாடலின் பாடலாசிரியர் மட்டுமல்லாது கிராமிய விருது வென்ற பாடகி தன்விஷா மற்றும் சின்மயி ஆகியோருடன் இணைந்து அப்பாடலை 2012 இல் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் “தாய் மண்ணே வணக்கம்” என்ற இசை நிகழ்ச்சியில் பாடலை பாடுகின்ற வாய்ப்பை பெற்றார். இவர் இரண்டாவது முறையாக ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பாடிய "காரா ஆட்டக்கார" பாடல் யூட்யூப் தளத்தில் (YouTube) 4 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவின் மாபெரும் நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் "லிங்கா" திரைப்படத்தில் இடம்பெற்ற
“ஓ நண்பா” பாடலில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமையும் ADK ஐ சாரும்.

ஏறத்தாழ 3 வருடங்களின் பின் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது தனது இசைநிகழ்ச்சியில் நம் நாட்டு இசைக்கலைஞர் ADK ஐ இணைத்துக்கொண்டுள்ளார். “நெஞ்சே எழு” என பெயரிடப்பட்டுள்ள இவ் இசைநிகழ்ச்சியானது சென்னை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களின் மீட்புப்பணிக்காக நிதி திரட்டும் பொருட்டு இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள 3 மாநகரங்களில் இடம்பெறவுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் அழைப்பின் பேரில் ADK உட்பட மேலும் பல பாடகர்கள் பங்கேற்கவுள்ள இவ் இசை நிகழ்ச்சியானது ஜனவரி 16ம் திகதி சென்னையிலும், ஜனவரி 23ம் திகதி கோயபுத்தூரிலும் மற்றும் ஜனவரி 31ம் திகதி மதுரையிலும் இடம்பெறவுள்ளது.

இவ் இசைநிகழ்ச்சியில் ADK, தான் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணி புரிந்து, மக்கள் வரவேற்பை பெற்ற பாடல்களை பாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இசைப்புயலுடன் இணைந்து பணியாற்றும் இந்த ஆர்வம் சந்தேகத்துக்கிடமின்றி இது இலங்கையை சேர்ந்த ஏனைய சுயாதின இசைக்கலைஞர்களுக்கும் பெருமையையும், உத்வேகத்தை தூண்டக்கூடியதுமான ஒரு தருணம் ஆகும்.

தன் இசைப்பயணத்தை மிக எளிமையான முறையில் தொடங்கிய ஆரியன் தினேஷ் கனகரட்னம் தற்போது இசை உலகில் பெரும் சாதனைகளை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்களை கூறி நாமும் மன வலிமையை சேர்க்கிறோம்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top