சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர், தனனை அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறும்படி கூறிய தாயை, நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.எஸ். இயக்கத்தில் உள்ள தீவிரவாதி, நேற்று ராக்கா நகரில் தன் தாயை,பொதுமக்கள் மத்தியில் படுகொலை செய்ததாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
“அல் தபஹா நகரில் இருந்து ராக்கா நகருக்கு வந்து பணியாற்றி வரும் அந்தப் பெண், தன் மகனை ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து விலகுமாறு கூறியுள்ளார். மேலும் அமெரிக்கா தலைமையில் இயங்கும் கூட்டுப்படை, அனைத்து ஐ.எஸ் தீவிரவாதிகளையும் கொன்றுவிடும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, ஐ.எஸ். இயக்கத்தினர் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். பின்னர் ராக்கா நகரில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெண்ணை மகனே கொலை செய்துள்ளான்“ என மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.
பெற்ற தாயை துடிக்கத்துடிக்க கொன்ற அந்த தீவிரவாதி 20 வயதான அலி சகர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.